தேவர் ஜெயந்தியையொட்டி, முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கிய தங்கக்கவசம் தேவர் திருமகனார் திருவுருவச் சிலைக்கு அணிவிக்கப்பட்டது - பசும்பொன்னில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்று மரியாதை

Oct 25 2016 4:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேவர் ஜெயந்தியையொட்டி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வழங்கிய தங்கக்கவசம், மதுரையில் இருந்து பசும்பொன்னிற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. பசும்பொன்னில் சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் தேவர் திருமகனார் திருவுருவச்சிலைக்கு அணிவிக்கப்பட்டது.

விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தேசபக்தருமான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 28, 29 மற்றும் 30-ம் தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறுவது வழக்கம். அக்டோபர் 28-ம் தேதி ஆன்மிக விழாவும், 29-ம் தேதி அரசியல் விழாவும், 30-ம் தேதி குருபூஜை விழாவும் நடத்தப்படும். இந்த ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 109-வது பிறந்தநாள் விழாவும், 54-வது குருபூஜை விழாவும் நடைபெற உள்ளது.

அ.இ.அ.தி.மு.க சார்பில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தேவரின் திருவுருவச் சிலைக்கு வழங்கிய பதிமூன்றரை கிலோ எடையுள்ள தங்கக் கவசம், இன்று மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து பசும்பொன்னிற்கு கொண்டு செல்வதற்காக அமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம், தேவர் குருபூஜை விழாக் குழுவினரிடம் வழங்கினார். பின்னர், காவல்துறை பாதுகாப்புடன் தங்கக்கவசம் பசும்பொன்னிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் திரு.செல்லூர் கே.ராஜூ, திரு.ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் மாவட்டக்கழகச் செயலாளர் திரு.ராஜன்செல்லப்பா மற்றும் கழக நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பசும்பொன் கொண்டு வரப்பட்ட தங்கக்கவசம், முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு பூஜை செய்யப்பட்டு அணிவிக்கப்பட்டது. இதில், அமைச்சர் டாக்டர் மணிகண்டன் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பசும்பொன் நினைவிடத்தில், வரும் 31ம் தேதி வரை தேவர் திருமகனாரின் திருவுருவச்சிலைக்கு இந்த தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டிருக்கும்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00