தமிழக அரசின் எண்ணற்ற சாதனை திட்டங்களை எடுத்துக்கூறி, உள்ளாட்சித் தேர்தலில் கழக வேட்பாளர்கள் பிரச்சாரம் - செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் அமோக வரவேற்பு

Oct 1 2016 11:00AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக உள்ளாட்சித் தேர்தல் வரும் 17 மற்றும் 19-ம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், 12 மாநகாட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் மற்றும் 31 மாவட்ட ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தலில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, கழக வேட்பாளர்கள் அரசின் எண்ணற்ற சாதனை திட்டங்களை எடுத்துக்கூறி , தேர்தல் பிரச்சாரத்தை நேற்று தொடங்கியுள்ளனர்.

சென்னை எழும்பூர் 38, 52, 58, 77, 78-வது வார்டு, அ.இ.அ.தி.மு.க. சார்பில், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.

சென்னை கே.கே.நகர் பகுதியில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, 131-வது வார்டு, கழகத்தின் சார்பில் முதலமைச்சரின் சாதனைகளை விளக்கி வாக்குசேகரித்தனர். இதேபோல் சென்னை கோயம்பேடு 127வது வார்டில், கழகம் சார்பில் வீதிவீதியாக வாக்குசேகரித்தனர்.

சென்னை மாநகராட்சி 6-வது வார்டுக்குட்பட்ட ராஜா சண்முகம் நகர், 7வது வார்டுக்குட்பட்ட பாலகிருஷ்ணா நகர், 27வது வார்டுக்குட்பட்ட மாதவரம் பெருமாள் கோயில் தெரு, 80-வது வார்டுக்குட்பட்ட புதூர், 90-வது வார்டுக்குட்பட்ட திருவல்லீஸ்வரர் நகர் பகுதிகளில் கழக வேட்பாளர்கள் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிக்குழு வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 3, 17, 20வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் வாக்குசேகரித்தனர்.

காஞ்சிபுரம் பெருநகராட்சி 7,14, 21, 45வது வார்டு பகுதிகளில் கழக வேட்பாளர்கள், முதலமைச்சரின் சாதனை எடுத்துக்கூறி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

சென்னை மாநகராட்சி 14,15வது மண்டலங்களில் கழக வேட்பாளர்கள் வாக்குசேகரித்தனர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 31, 32 உள்ளிட்ட வார்டு பகுதிகளில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளரை ஆதரித்து அப்பகுதியில் வீடு வீடாகச் சென்று அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாக்கு சேகரித்தனர்.

ராமநாதபுரம் நகராட்சி 28-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளரை ஆதரித்து அப்பகுதியில் வீடு வீடாகச் சென்று அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாக்கு சேகரித்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கழக வேட்பாளர்களுடன், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் சென்றனர்.

மதுரை மாநகராட்சி 88-வது வார்டுக்கு உட்பட்ட சோலை அழகுபுரம் பகுதியில், வீதி வீதியாகச் சென்று அ.இ.அ.தி.மு.க.வினர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இதேபோல், மதுரை புறநகர் மாவட்டத்திற்குட்பட்ட அழகர்கோவில், மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் கழக வேட்பாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

திருவண்ணாமலையில் நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்கள், திருவூடல் தெரு, கோபுர வீதி, பெரிய தெரு, தேரடி வீதி, ஆணைகட்டி தெரு மற்றும் ஆரணி, வந்தவாசி நகர்மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்கள் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள், வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

திருச்சி மாநகராட்சி 22, 25-வது வார்டுகளுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கழக வேட்பாளர்கள் வீடுவீடாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவக்கோட்டை, சிவகங்கை நகராட்சிகள், 12 ஒன்றியங்களில் உள்ள வார்டுகளில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குட்பட்ட 9, 11வது வார்டுகளில் வீடுவீடாக சென்று கழக நிர்வாகிகளும், வேட்பாளர்களும் வாக்குசேகரித்தனர்.

கும்பகோணத்தில் பல்வேறு வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் கழக வேட்பாளர்கள் வாக்குசேகரித்தனர்.

தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

கடலூர் நகராட்சி 7, 45வது வார்டுகளில் நகர்மன்ற பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்கள் வாக்குசேகரித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் கடையத்திலுள்ள 20-வது வார்டிலுள்ள ஆசிர்வாதபுரம், கீழமாதாபுரம் பகுதிகளில் கழக வேட்பாளர்கள் வாக்குசேகரித்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள தென்னங்குடி பாளையம் கிராமத்தில் கழக வேட்பாளர்கள் வாக்குசேகரித்தனர்.

புதுக்கோட்்டை நகராட்சியின் 4வது வார்டு கோவில்பட்டி பகுதிகளில் முதலமைச்சரின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்குசேகரித்தனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்ுசியில் கழக வேட்பாளர்கள் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, பல்வேறு பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டத்தில் தருப்பூண்டி, சோழன்பேட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழக வேட்பாளர்கள், கழக நிர்வாகிகளுடன் வாக்குசேகரித்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியம், செண்பகபுதூரில் வீடுவீடாக சென்று வாக்குசேகரித்தனர்.

தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 23வது வார்டு பகுதியில் கழக வேட்பாளர் வாக்குசேகரித்தார்.

திண்டுக்கல் மாநகராட்சியில் 10, 15வது வார்டுகளில் கழக வேட்பாளருடன், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் வாக்குசேகரித்தனர்.

தருமபுரி நகராட்சிக்குட்பட்ட 33வது வார்டு பகுதியில் முதலமைச்சரின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்குசேகரித்தனர.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00