முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் அ.இ.அ.தி.மு.க.வினர் பெருந்திரளானோர் தொடர்ந்து சிறப்பு வழிபாடு

Sep 29 2016 12:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில், அ.இ.அ.தி.மு.க.வினர் பெருந்திரளானோர் தொடர்ந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை சகாயமாதா ஆலயத்தில், மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டக்கழகம் சார்பில், கோட்டை மாரியம்மன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டக்கழகம் சார்பில், அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் கோயிலில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் 108 சூரை தேங்காய் உடைத்து பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதி அ.இ.அ.தி.மு.க. சார்பில், சந்திரமெளலீஸ்வரர் ஆலயத்தில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்டக்கழகம் சார்பில், ஸ்ரீரேணுகாதேவியம்மன் ஆலயத்தில் ஆயிரத்து 8 அகல்விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மதுரை மாநகர் மாவட்ட ஜெ ஜெயலிதா பேரவை சார்பில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், சுவாமிக்கு மலர்களால் லட்சார்ச்சனை மற்றும் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நெல்லை மாவட்டம், பாபநாசம் ஸ்கலவிநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

வேலூர் கிழக்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், கோட்டை ஜலகண்டேஸ்வரர் ஆலயத்திலுள்ள ஸ்ரீ பைரவருக்கு சிறப்பு வழிபாடும், மகாதீபாராதனையும் நடைபெற்றது.

கரூர் மாவட்டக்கழகம் சார்பில், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00