சென்னையில், 5 கிலோ எடைகொண்ட குழந்தை சுகப்பிரசவம் மூலம் பிறந்தது : அரசு மருத்துவர்கள் சாதனை

Sep 14 2016 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரிதான அறுவை சிகிச்சைகளை கட்டணமின்றி சிறப்பாக மேற்கொண்டு, மருத்துவத்துறையில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி வரும் அரசு மருத்துவர்கள், மேலும் ஒரு சாதனையாக சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கு அதிக எடைகொண்ட குழந்தையை சுகப்பிரசவம் மூலம் காப்பாற்றியுள்ளனர்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையிலான அரசு, தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் தரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, பலகோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததன் மூலம், மருத்துவத்துறையில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன.

சென்னை வேப்பேரியைச் சேர்ந்த திருமதி. கல்பனா என்பவர், 2-வது பிரசவத்திற்காக, சென்னை அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய் - சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது வயிற்றில் இருந்த குழந்தை, சராசரி எடையைவிடவும் அதிக எடை கொண்டதாக இருந்த போதிலும், அரசு மருத்துவர்களின் சிறப்பான கண்காணிப்பில், சுமார் 5 கிலோ எடை கொண்ட பெண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது. பொதுவாக இதுபோன்ற தருணங்களில், குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் என்பதால், சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் நிலையில், அதுபோன்ற அறுவை சிகிச்சை இல்லாமல் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மிகுந்த அக்கறையுடனும், பொறுப்புடனும் செயல்பட்டு, சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற சிகிச்சை அளித்ததற்காக, அந்தப் பெண்ணும், கணவரும், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அண்மைக் காலங்களில், குழந்தைப் பிறப்பு என்றாலே சிசேரியன் என்றாகிவிட்ட காலகட்டத்தில், வழக்கத்தைவிட அதிக எடை கொண்ட குழந்தையை, அறுவை சிகிச்சை இல்லாமல் சுகப்பிரசவம் நடத்தி சாதனை படைத்திருப்பது, அரசு மருத்துவர்களின் மகத்தான சேவைக்கு கிடைத்துள்ள சான்று என்றால், அது மிகையல்ல..
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00