விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பு

Aug 27 2016 11:07AM
எழுத்தின் அளவு: அ + அ -

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வரும் 5-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, வீடுகள் மற்றும் கோயில்களில் விதவிதமான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடுகள் நடைபெறும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில், கிழங்கு மாவு, காகிதக் கூழ் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு, விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. 2 அடி முதல் 16 அடி உயரம் கொண்ட விதவிதமான விநாயகர் சிலைகள், இங்கு இரவு பகலாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. மயில் வாகன விநாயகர், கஜ வாகன விநாயகர், அன்ன வாகன விநாயகர், ஐந்து முக விநாயகர், லிங்க விநாயகர், பாகுபலி விநாயகர் உள்ளிட்ட விநாயகர் சிலைகள் மக்களை பெரிதும் கவர்ந்துள்ளன. விழுப்புரம் மாவட்டம், அய்யங்கோயில்பட்டு, சித்தலிங்கமடம், பிடாகம், சாலை அகரம், பள்ளித்தென்னல், பேரங்கியூர், திருக்கோவிலூர் உள்ளிட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இந்த சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00