மேட்டுப்பாளையத்தில் துரியன் பழ சீசன் தொடக்கம் - மருத்துவ குணம் நிறைந்ததால் ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் சுற்றுலாப் பயணிகள்

Aug 25 2016 10:33AM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், மருத்துவ குணம் கொண்ட துரியன் பழ சீசன் தொடங்கியுள்ளது. இப்பழங்களை ஏராளமானோர் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

மேட்டுப்பாளையம் அருகே உதகை சாலையில் அமைந்துள்ள பர்லியாறு அரசு தோட்டக்கலை பழப்பண்ணையில், பலாப்பழம், மங்குஸ்தான், ஜாதிக்காய் போன்ற பழ வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு தற்போது, மருத்துவ குணம் கொண்ட துரியன் பழ சீசன் துவங்கியுள்ளது. மலேசியாவை தாயகமாகக் கொண்ட இப்பழம், நீலகிரி மலைத்தொடரில் அமைந்துள்ள பர்லியாறில் மட்டுமே பயிர் செய்யப்படுகிறது. இப்பண்ணையில் சுமார் 80க்கும் மேற்பட்ட மரங்களில் தற்போது துரியன் பழம் காய்த்துள்ளது. எவ்வித உரங்களுமின்றி இயற்கையாக வளரும் தன்மை கொண்ட துரியன் பழங்களில் வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் நிறைந்துள்ளன. மேலும், இப்பழத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திறன் உள்ளதாகவும் நம்பப்படுகிறது. இதனால், குழந்தை இல்லாத தம்பதியரும், உதகைக்கு சுற்றுலா வருபவர்களும் இப்பழங்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00