உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவதற்கான தேர்தல் களப்பணிகள் குறித்து நடைபெற்ற செயல்வீரர்கள் - வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்

Jul 30 2016 7:37AM
எழுத்தின் அளவு: அ + அ -

உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவதற்கான தேர்தல் களப்பணிகள் குறித்து நடைபெற்ற செயல்வீரர்கள் - வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 67-வது வட்ட செயல் வீரர்கள் - வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கழக சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு.ஜே.சி.டி.பிரபாகர், வடசென்னை வடக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.பி.வெற்றிவேல் மற்றும் ஜெ ஜெயலலிதா பேரவை, மகளிர் அணி, மீனவர் அணி, மாணவர் அணி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, எம்.ஜி.ஆர்.மன்றம், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கழகத் தொண்டர்கள் கலந்துகொண்டனர். அப்போது, உள்ளாட்சிமன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி பெறும் வகையில் களப்பணியாற்றுவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதேபோல், சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் 99-வது வட்ட செயல்வீரர்கள் - வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து பிரிவு நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்துகொண்டனர். உள்ளாட்சி மன்றத் தேர்தல் களப்பணிகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றி பெறுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில் திருவண்ணாமலையில் நடைபெற்றது. அமைச்சர் திரு.சேவூர் எஸ். ராமச்சந்திரன், கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் திரு.ஆர்.கமலக்கண்ணன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00