திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகி சாலை விபத்தில் உயிரிழந்ததற்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்

Jun 25 2016 7:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகி, சாலை விபத்தில் உயிரிழந்ததற்கு, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருவாரூர் மாவட்டம், குடவாசல் வடக்கு ஒன்றியம், செருகுடி ஊராட்சிக் கழகச் செயலாளர் திரு. M.முத்தரசன், சாலை விபத்தில் அகால மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும், மேலும் இவருடன் பயணம் செய்த இவரது மனைவியும், குடவாசல் ஊராட்சி ஒன்றியக் குழு 2-ஆவது வார்டு உறுப்பினருமான திருமதி M. மாலதி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி கேட்டும் மிகுந்த வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார்.

கழக உடன்பிறப்புகள் சாலைகளில் பயணம் செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் செல்ல வேண்டும் என்று தாம் அடிக்கடி வலியுறுத்தி வந்த போதிலும், இதுபோன்ற விரும்பத் தகாத விபத்துகள் நடைபெற்று, விலை மதிக்க முடியாத தமதருமைக் கழக உடன்பிறப்புகள் உயிரிழப்பது மேலும் தம்மை வேதனையில் ஆழ்த்துகிறது என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். கழக உடன் பிறப்புகள் மிகுந்த கவனத்துடன் சாலைகளில் பயணம் செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அன்புச் சகோதரர் திரு. முத்தரசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துகொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமதி மாலதி விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்பவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00