காவேரி பிரச்சனையை புரிந்துகொள்ளாமல், உண்மைக்கு புறம்பாக பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு டெல்டா பகுதி விவசாயிகள் கடும் கண்டனம் : காவேரி பிரச்சனையில் தீவிர சட்டப்போராட்டம் நடத்தி, நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா என பாராட்டு

May 2 2016 10:23AM
எழுத்தின் அளவு: அ + அ -

காவேரி பிரச்சனையை புரிந்துகொள்ளாமல், உண்மைக்கு புறம்பாக பொய்ப் பிரச்சாரம் செய்துவரும் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு, காவேரி டெல்டா விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூரில் பேசிய கருணாநிதியின் மகள் கனிமொழி, காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லையென பொய் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்கு கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ள காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகள், காவேரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது, மத்திய அரசின் அதிகார வரம்புக்குட்பட்ட விஷயம் என்றும், இதில் மாநில அரசு தலையிட முடியாது என்றும் குறிப்பிட்டனர். மேலும், முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில், காவேரி பிரச்சனையில் ஒரு துரும்பைக்கூட தி.மு.க.வினர் கிள்ளிப்போடவில்லை என்றும், தீவிர சட்டப்போராட்டம் நடத்தி, காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, தி.மு.க.வினர் குறைகூறுவது கண்டனத்திற்குரியது என்றும் வேளாண் பெருமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், நெல்லுக்கான ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய விவசாயிகள், ஆதார விலையை நிர்ணயம் செய்வது மத்திய அரசுதான் என்றும், மாநில அரசால் ஊக்கத்தொகையை மட்டுமே நிர்ணயம் செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டனர். பொய்யான வாக்குறுதிகளை அளித்து விவசாயிகளை தி.மு.க.வினர் இனியும் ஏமாற்ற முடியாது என்றும் விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00