தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் : வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று கடைசி நாள் - வேட்பாளர் இறுதி பட்டியல் மாலை வெளியிடப்படும்

May 2 2016 6:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

234 தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க. மற்றும் தோழமை கட்சியின் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 16ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இத்தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களிடமிருந்து கடந்த 22-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. அதன்படி, 234 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் என 7,151 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து, நேற்று முன்தினம் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அ.இ.அ.தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகளின் வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதேபோல், மற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதும் நடைபெற்ற பரிசீலனையில், 234 தொகுதிகளிலும், மொத்தம் 3,019 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்பு மனுவை திரும்பபெறுவதற்கு இன்றுமாலை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் இதனைத்தொடர்ந்து, இன்று மாலை 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர் இறுதிப்பட்டியலை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00