பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் கட்டப்பட்ட உயர்மட்டப் பாலம் - வெளியூர்களுக்கு பயணம் செல்ல மிகவும் வசதியாக இருப்பதால், கிராம மக்கள் மகிழ்ச்சி - பாராட்டு

May 1 2016 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதிக்குட்பட்ட உரல்பட்டி கிராமத்தில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க புதிதாக உயர்மட்டப் பாலம் கட்டப்பட்டுள்ளதால், சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியூர்களுக்கு செல்ல வசதி ஏற்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சருக்கு இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளதுடன், வரும் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கே வாக்களிக்கப் போவதாகவும் உறுதிபடக் கூறியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உரல்பட்டி கிராமத்தில் ஓடும் ஆற்றின் குறுக்கே தரைமட்டப் பாலம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளம் வரும் போது, இந்தப் பாலத்தின் மீது தண்ணீர் ஓடுவதால், உரல்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கோவை, பழனி போன்ற வெளியூர்களுக்கு செல்லமுடியாத நிலைமை இருந்து வந்தது. முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும், அந்த அரசு செவி சாய்க்கவில்லை.

இந்நிலையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், இக்கிராம மக்கள் படும் சிரமத்தை உணர்ந்து, ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்ட உத்தரவிட்டார். அதன்படி, ஆற்றின் குறுக்கே புதிதாக உயர்மட்டப் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், சாமராயப்பட்டி, பெருமாள்புதூர், கொழுமம், கொமரலிங்கம் உள்ளிட்ட 10 கிராம மக்கள் கோவை போன்ற வெளியூர்களுக்கு எளிதாக பயணம் மேற்கொள்ள முடிகிறது. இதற்காக கிராமமக்கள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி தெரிவித்தனர். மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கே வாக்களிக்கப் போவதாகவும், கிராம மக்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை உடனுக்குடன் ஏற்று செயல்படுத்தி வருவதால் தமிழக மக்கள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பேராதரவு தெரிவித்து வருவது மறுக்க முடியாத உண்மை.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00