கோவை மாவட்டத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்ட மிகச்சிறப்பான நடவடிக்கைகள் மூலம், விளையாட்டுத்துறை மாபெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது

May 1 2016 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை மாவட்டத்தில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்ட மிகச்சிறப்பான நடவடிக்கைகள் மூலம், விளையாட்டுத்துறை மாபெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது. சென்னைக்கு நிகராக, இம்மாவட்டத்தில் விளையாட்டு மைதானங்கள் மேம்படுத்தப்பட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உபகரணங்கள், நிதியுதவி போன்றவை தொடர்ந்து வழங்கப்படுவதால் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு வீரர்-வீராங்கனைகள் உருவாகி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் 30 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைகளை அடுத்து, அங்கு அதற்கான பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் வீரர்-வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகள் கிடைப்பதற்காக, கடந்த 3 ஆண்டுகளாக 60 லட்சம் ரூபாய் தொடர் செலவினமாக வழங்கப்படுகிறது. கோவையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்த 30 மீட்டர் உயர்கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இளம் வீரர்-வீராங்கனைகளை தேர்ந்தெடுக்கும் திட்டம் மூலம், ஒரு நபருக்கு 2 லட்சம் ரூபாய் வீதம், ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தேசிய அளவில் சாதிக்கும் வீரர்கள் கண்டறியப்பட்டு, சர்வதேச பயிற்சிக்காக அவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இதேபோல் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதன் மூலம் கோவை மாவட்டத்தில் இளம் வீரர், வீராங்கனைகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு ஊக்கப்பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது.

இதன்மூலம் கோவை மாவட்டம், விளையாட்டுத்துறையில் சென்னைக்கு நிகராக உருவெடுத்திருப்பதை யாரும் மறுத்திட முடியாது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00