கோவை மாநகரில் அதிகரித்து வரும் குடிநீர் தேவையை சமாளிக்க 159 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பில்லூர் குடிநீர் திட்டம் துவக்கம் - சுமார் 5 லட்சம் பேர் பயனடையும் வகையில் முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை

Apr 30 2016 10:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை மாநகராட்சியில் மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அனைத்துப் பகுதிகளிலும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்கும் வகையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின் பேரில் சுமார் 160 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டம், பொதுமக்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்காக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சீரிய திட்டங்களால், கடந்த 5 ஆண்டுகளில் தொழில்துறை அமோக வளர்ச்சி பெற்றுள்ளது. இதன் காரணமாக, மாநகராட்சி பகுதியில் மட்டுமின்றி விரிவாக்கப்பட்ட பகுதிகளிலும் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே வருகிறது. மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, அனைத்து பகுதிகளிலும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்கும் வகையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில் பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டம் துவங்கப்பட்டது.

159 கேடியே 85 லட்சம் ரூபாய் செலவில், மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெள்ளியங்காட்டில் துவக்கப்பட்ட இந்த திட்டப்பணிகள், போர்க்கால அடிப்படையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. 125 எம்.எல்.டி திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரதான நீர் சேமிப்பு தொட்டி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கொண்டு செல்லும் ராட்ஷச குடிநீர் குழாய்கள் அமைத்தல் என அனைத்து பணிகளும் நிறைவடைந்து, தற்போது கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் 4 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடையின்றி குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

பில்லூர் இரண்டாவது குடிநீர் விநியோக திட்டத்தை, தாயுள்ளத்துடன் நிறைவேற்றி தந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, கோவை மாநகராட்சி மக்கள், நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00