முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மருத்துவ மேம்பாட்டுக்காக 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு - கோவை மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டி 63 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் திறப்பு

Apr 30 2016 7:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றது முதல் கடந்த 5 ஆண்டுகளில், அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க, 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மருத்துவ வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மக்கள் நலன் ஒன்றையே தனது குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக மருத்துவ துறைக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மருத்துவ வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் நூற்றாண்டு விழா மருத்துவமனை கட்டடம் 63 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவுக்கான கட்டடம், 6 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டு கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. புற்றுநோய் சிகிச்சை மையம் மற்றும் சிகிச்சை அளிக்க தேவையான உபகரணங்களுக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோவை மருத்துவ கல்லூரியில், ஆண்கள் மாணவர் விடுதி 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் மாணவியர் விடுதி கட்டும் பணிகள் 3 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகின்றன. நவீன பிரேத பரிசோதனை கூடம் கட்டும் பணி 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. மேலும், மருத்துவமனை மைய நூலகம் 3 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், மருத்துவமனைக்கு வரும் மக்கள் நல்ல முறையில் சிகிச்சை பெற்று மன நிறைவுடன் செல்கின்றனர். குறிப்பாக மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவில் அனுமதிக்கப்படும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகச்சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவை மருத்துவமனைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்து மக்களுக்கு சிறப்பான சிகிச்சை கிடைக்க வழிவகை செய்த முதலமைச்சருக்கு அப்பகுதி மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00