தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் பிரச்சாரக் பொதுக்கூட்டத்திற்காக வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அலைகடலென லட்சக்கணக்கில் திரண்டிருந்த, பொதுமக்களும், அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும் எழுச்சிமிகு வரவேற்பு

Apr 30 2016 7:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, தமது தேர்தல் பிரச்சார சூறாவளி சுற்றுப்பயணத்தில், விழுப்புரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் எழுச்சிப் பேருரையாற்றி, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்திற்கு பேராதரவு திரட்டினார். முன்னதாக விழுப்புரம் வருகை தந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, அலைகடலென லட்சக்கணக்கில் திரண்டிருந்த, பொதுமக்களும் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்விஜெ ஜெயலலிதா, "மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்ற தாரக மந்திரத்துடனும், தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மகத்தான வெற்றி என்ற இலட்சிய முழக்கத்துடனும், தமது தேர்தல் பிரச்சாரத்தை, சென்னையில், கடந்த 9-ம் தேதி தொடங்கினார்.

சென்னையைத் தொடர்ந்து, விருத்தாசலம், தருமபுரி, அருப்புக்கோட்டை, காஞ்சிபுரம், சேலம், திருச்சிராப்பள்ளி, புதுச்சேரி, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்ற மிகப் பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்களில், லட்சோபலட்சம் பொதுமக்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களிடையே முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா எழுச்சிப் பேருரையாற்றி அ.இ.அ.தி.மு.க.வுக்கு வாக்கு சேகரித்தார்.

சட்டமன்றத் தேர்தல் சூறாவளி சுற்றுப்பயணத்தின் அடுத்தகட்டமாக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, விழுப்புரத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். விழுப்புரம் ஆவின் பால்பண்ணை அருகே உள்ள மாபெரும் திடலில் நடைபெற்ற எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பேருரையாற்றினார்.

முன்னதாக, சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, Binny சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட இடங்களில் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு நின்று, வாழ்த்து முழக்கங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, விழுப்புரத்துக்கு வருகை தந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் திரு. ப. மோகன், டாக்டர். R. லட்சுமணன் எம்.பி., விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. கதிர் தண்டபாணி, திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. பெருமாள்நகர் K. ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. S. ராஜேந்திரன், டாக்டர். க. காமராஜ், திரு. செஞ்சி வெ. ஏழுமலை ஆகியோர் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவுக்கு மலர்க்கொத்துகள் வழங்கி வரவேற்றனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை வரவேற்கும் விதமாக, விழுப்புரத்தில் வழிநெடுகிலும், சாலையின் இரு மருங்கிலும், கழகக் கொடித் தோரணங்கள் அழகுற அமைக்கப்பட்டிருந்தன. பல்லாயிரக்கணக்கான அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள், கழகக் கொடிகளையும், வரவேற்புப் பதாகைகளையும், இரட்டை இலைச் சின்னங்களையும் தங்கள் கைகளில் ஏந்தியவண்ணம், "புரட்சித் தலைவி அம்மா வாழ்க" என்று விண்ணதிர முழக்கமிட்டு, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவை மகிழ்ச்சிபொங்க வரவேற்றனர்.

செண்டைமேளங்கள், பேண்ட் வாத்தியங்கள் உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகள் முழங்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா செல்லும் வழியில், நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு, பூரண கும்ப மரியாதை அளித்தனர். பொதுக்கூட்ட மேடையருகே, மயிலம் அருள்மிகு சுப்பிரமணியம் சுவாமி திருக்கோவில், பூவரசங்குப்பம் அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் ஆகிய கோயில்கள் சார்பில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடைக்கு வருகைதந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, அங்கு திரண்டிருந்த லட்சோபலட்சம் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் "அம்மா வாழ்க" என்ற வாழ்த்தொலி முழக்கம் எட்டுத் திக்கும் எதிரொலிக்க எழுச்சிமிகு வரவேற்பளித்தனர்.

பொதுக்கூட்டத் திடலில், லட்சக்கணக்கில் அலைகடலென திரண்டிருந்த பொதுமக்களையும், அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களையும் பார்த்து, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்தைக் குறிக்கும் வகையில், முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, தமது விரல்களை உயர்த்திக் காண்பித்து, அனைவருக்கும் தமது நல்வாழ்த்துக்களையும், நல்லாசிகளையும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், எழுச்சிப் பேருரையாற்றி, அ.இ.அ.தி.மு.க.வை மகத்தான வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொண்டார்.

பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில், லட்சக்கணக்கில் திரண்டிருந்த கழகத் தொண்டர்களும், பொதுமக்களும், மிகுந்த உற்சாகத்தோடும், எழுச்சியோடும், "புரட்சித் தலைவி அம்மா வாழ்க" என, விண்ணதிர வாழ்த்து முழக்கங்கள் எழுப்பி, "எங்கள் வாக்கு இரட்டை இலைச் சின்னத்திற்கே" என்று உறுதியளித்து, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவுக்கு தங்களின் பேராதரவைத் தெரிவித்தனர்.

இந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், கோலியனூர் கிழக்கு ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் திரு.S. குணசேகரன், காணை ஒன்றிய ம.தி.மு.க. துணைச் செயலாளர் திரு. R. சுப்பிரமணி, விழுப்புரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி செயலாளர் திரு. பருதிபுரம் M. சர்க்கரை, விழுப்புரம் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் துணைச் செயலாளர் திரு. க. பாரதிராஜா, விழுப்புரம் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் பொருளாளர் திரு. வே. அய்யனார், தி.மு.க.வைச் சேர்ந்த சின்னசேலம் பேரூராட்சி 15-வது வார்டு உறுப்பினர் திரு.கு. ஜெயமணி, காங்கிரஸ் கட்சியின் சங்கராபுரம் தொகுதி செயலாளர் திரு.S. நடராஜன், சின்னசேலம் ஒன்றியம் மாத்தூர் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான திரு.R. ராஜன், கள்ளக்குறிச்சி ஒன்றிய பா.ம.க. துணை தலைவர் திரு.P. சின்னசாமி, கல்வராயன்மலை தெற்கு ஒன்றிய தே.மு.தி.க. பொருளாளர் திரு. பாட்டுக்காரன் C. ராமச்சந்திரன், கல்வராயன்மலை தெற்கு ஒன்றிய தே.மு.தி.க. துணைச் செயலாளர் திரு.C. பாபு, சின்னசேலம் ஒன்றிய தே.மு.தி.க. துணைச் செயலாளர் திரு.K.ராமு ஆகியோர், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா முன்னிலையில், அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர். கழகத்தில் இணைந்தவர்களுக்கு முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, உறுப்பினர் அட்டைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

விழுப்புரம் தேர்தல் பிரச்சார பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில், லட்சக்கணக்கில் திரண்டிருந்த கழகத் தொண்டர்களும், பொதுமக்களும், மிகுந்த உற்சாகத்தோடும், எழுச்சியோடும், "புரட்சித் தலைவி அம்மா வாழ்க" என எட்டுத்திக்கும் எதிரொலிக்க வாழ்த்து முழக்கங்கள் எழுப்பி, "எங்கள் வாக்கு இரட்டை இலைச் சின்னத்திற்கே" என்று உறுதியளித்து, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவுக்கு தங்களின் பேராதரவைத் தெரிவித்தனர். இதன்மூலம், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இரட்டை இலைச் சின்னத்தின் அமோக வெற்றி மென்மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00