தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டுள்ளன

Feb 7 2016 2:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக, சேலம், நீலகிரி, கரூர், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்கெனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பீகார் மாநிலம் பத்சார், பைகுசாராஸ் மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 2 லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்ட 2 ஆயிரத்து 300 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 2 ஆயிரத்து 137 வாக்குப்பதிவு இயந்திரங்களும், பூதபாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதனை மாவட்ட ஆட்சியர் திரு. சஜ்ஜன்சிங் சவான் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோல், ஈரோடு மாவட்டத்திற்கான 2 ஆயிரத்து 850 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மஹாராஷ்டிர மாநிலத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டுள்ளன. ஈரோடு காமராஜர் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் திரு. எஸ். பிரபாகர் நேரில் சென்று பார்வையிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00