முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் கழக அரசின் சாதனை விளக்க லட்சியப் பேரணி - கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்று, பொதுமக்களை சந்தித்து பிரச்சாரம்

Feb 5 2016 11:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனைகளை, தமிழகம் முழுவதிலும் உள்ள 65 ஆயிரத்து 616 வாக்குச் சாவடிகளுக்கு உட்பட்ட 5 கோடியே 62 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களிடம் நேரடியாக எடுத்துச் சென்று, சட்டமன்றத் தேர்தலில் கழகம் நூறு சதவீத முழுமையான வெற்றியை பெற்றிடும் வகையில், தமிழகம் முழுவதும் ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், மாபெரும் சாதனை விளக்க லட்சியப் பேரணி இன்று நடைபெற்றது. இந்தப் பேரணியில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு, வாக்காளர்களை சந்தித்து கழக அரசின் சாதனைகளை விளக்கும் பிரசுரங்களை வழங்கினர்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசு, தமிழக மக்களின் நல்வாழ்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. ஜனநாயக ஆட்சி முறையில் ஓர் அரசின் திட்டங்களையும், சாதனைகளையும், வாக்களிக்கும் மக்கள் ஒவ்வொருவரும் முழுமையாக தெரிந்துகொள்வது அந்த அரசுக்கு உறுதியும், பெருமையும் சேர்க்கும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட 5 கோடியே 62 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களையும், அ.இ.அ.தி.மு.க. சார்பில் நேரடியாக சந்திக்க, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு வாக்கு சேகரிப்பாளர் நியமிக்கப்பட்டு, கழக அரசு மக்கள் மேம்பாட்டிற்காக மேற்கொண்டுள்ள முயற்சிகளையும், செய்து முடித்திருக்கும் சாதனைகளையும், அவற்றின் காரணமாக வரலாறு காணாத வளர்ச்சிப் பாதையில் தமிழகம் சென்றுகொண்டிருப்பதையும், முன் எப்போதும் காணாத முன்னேற்றப்பாதையில் தமிழகம் வெற்றி நடை போட்டுக்கொண்டிருப்பதையும் எடுத்துக்கூறுவது இன்றியமையாதது என்றும், இந்த மகத்தான பணியினை தமது பெயரில் செயல்பட்டு வரும் பேரவை மேற்கொள்ளும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச் சாவடி வாரியாக, ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில் நியமிக்கப்படும் ஒவ்வொரு வாக்கு சேகரிப்பாளரும், சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிக்கு உட்பட்ட கழக நிர்வாகிகளுடன் சென்று, அந்தப் பகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் எத்தனை முறை சந்திக்க இயலுமோ அத்தனை முறை சந்தித்து, கழக அரசின் சாதனைகளை எடுத்துரைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வலியுறுத்தியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, இவ்வையகத்தில் இதுவரை யாரும் சிந்தித்திடாத, வளர்ச்சித்திட்டங்களை எல்லாம் - தொலைநோக்கு திட்டங்களையெல்லாம் - மக்கள் நலன்காக்கும் மகத்தான திட்டங்களையெல்லாம் - உலகம் போற்றுகின்ற உன்னதத் திட்டங்களையெல்லாம் - வாரிவாரி வழங்கி, இந்நாட்டு மக்களையெல்லாம், நலமோடும், வளமோடும் வாழவைத்து, இந்திய திருநாட்டில், தாய் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உருவாக்கித்தந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசின் சரித்திர சாதனைகளை வாக்காளர்களிடத்தில் நேரிலே எடுத்துச்சென்று, வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. நூறு சதவீத முழுமையான வெற்றியை பெற்றிடவேண்டி, பல்வேறு மாவட்டங்களில் ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், சாதனை விளக்க லட்சியப் பேரணி இன்று நடைபெற்றது.

சென்னை எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் பகுதியில் அமைச்சர் திருமதி. பா. வளர்மதி தலைமையில் நூற்றுக்கணக்கான கழகத்தினர் கடைகள் மற்றும் வீடுகள்தோறும் சென்று, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான கழக அரசின் சரித்திர சாதனைகளை விளக்கும் பிரசுரங்களை வழங்கினர். இந்த பேரணியில், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயவர்தன், தென்சென்னை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. எம்.எம். பாபு, தென்சென்னை தெற்கு மாவட்ட ஜெ. ஜெயலலிதா பேரவை செயலாளர் திரு. ஏ.எம். புருஷோத்தமன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

சென்னை தி.நகர் முத்துரங்கன் சாலையில் நடைபெற்ற சாதனை விளக்க லட்சிய பேரணிக்கு அமைச்சர் திருமதி. கோகுலஇந்திரா தலைமை ஏற்றார். கழக அரசின் சாதனைகளை விளக்கும் பிரசுரங்கள் வியாபாரிகள், வணிகர்கள் மற்றும் கடைக்காரர்களுக்கும், வாகனங்களில் சென்றவர்களுக்கும் வழங்கப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த பேரணியில், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயவர்தன், தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. சத்யா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

வடசென்னை வடக்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தனபால் நகர், செரியன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கழகத் தொண்டர்கள் பேரணியாகச் சென்று பொதுமக்களை சந்தித்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான கழக அரசின் சாதனைகளை விளக்கும் பிரசுரங்களை விநியோகித்தனர். இப்பேரணியில், மாவட்ட பேரவை செயலாளர் திரு. ஆர்.எஸ். ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், அம்பத்தூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற லட்சியப் பேரணியை அமைச்சர்கள் திரு. R.B. உதயகுமார், திரு. B.V. ரமணா, திரு. எஸ். அப்துல் ரஹிம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் திரு. வி.அலெக்சாண்டர், மாவட்ட கழக செயலாளர் திரு. சிறுனியம் பி. பலராமன், மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை செயலாளர் திரு. எஸ். பரமசிவம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பேரணியில் கலந்துகொண்டனர். பேரணியில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான தொண்டர்கள் சீருடையில் அணிந்து கழக கொடியேந்தி, கழக அரசின் சாதனைகளை விளக்கும் பிரசுரங்களை வீடு, வீடாகச் சென்று வழங்கினர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், ஆவடியில் நடைபெற்ற லட்சியப் பேரணியில், அமைச்சர்கள் திரு. R.B. உதயகுமார், திரு. B.V. ரமணா, திரு. எஸ். அப்துல் ரஹிம், மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை செயலாளர் திரு. ஆர். மணிமாறன் எம்.எல்.ஏ. உட்பட திரளான கழகத்தினர் கலந்துகொண்டனர்.

வரும் சட்டமன்ற தேர்தலில் கழகத்திற்கு 100 சதவீத முழுமையான வெற்றியை பெற்றுதரும் வகையில், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், அமைச்சர் திரு. T.K.M. சின்னையா தலைமையில் நடைபெற்ற பேரணி, பழவந்தாங்கல் வேம்புலியம்மன் கோயில் அருகில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக நங்கநல்லூர் பேருந்து நிலையம் அருகே முடிவடைந்தது. கழக அரசின் சாதனைகளை விளக்கும் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த பேரணியில், சட்டமன்ற உறுப்பினர், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை செயலாளர் மடிப்பாக்கம் திரு. கபாலீஸ்வரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மதுரை புறநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்ற லட்சியப் பேரணியில் மேயர் திரு. ராஜன் செல்லப்பா, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசின் சரித்திர சாதனைகள் விளக்கும் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

மதுரை மாநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெற்ற லட்சியப் பேரணியில், நூற்றுக்கணக்கான கழகத்தினர், பெரியார் பேருந்து நிலைய பகுதியில் பொதுமக்களுக்கு கழக அரசின் சாதனைகளை விளக்கும் பிரசுரங்களை வழங்கினர். மாநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை செயலாளர் திரு. டேவிட் அண்ணாதுரை, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கோபாலகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருப்பூர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், நடைபெற்ற லட்சியப் பேரணியில் அமைச்சர் திரு. எம்.எஸ்.எம். ஆனந்தன், அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்து துவக்கி வைத்தார். சீருடையில் வந்த வாக்கு சேகரிப்பாளர்கள் வீடு, வீடாகச் சென்று கழக அரசின் சாதனைகளை விளக்கும் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற லட்சியப் பேரணியை அமைச்சர் திரு. K.T. ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான கழக அரசின் சரித்திர சாதனைகளை விளக்கும் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி. ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர், ஜெ ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் திரு. செல்வசுப்பிரமணிய ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், பழனி பேருந்து நிலையம் அருகே இருந்து புறப்பட்ட லட்சியப் பேரணியில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எம். உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை செயலாளர் திரு. V.T. ராஜன் உட்பட நூற்றுக்கணக்கான கழகத்தினர் பங்கேற்றனர். திண்டுக்கல் சாலை, தாராபுரம் சாலை, பெரியகடை வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் அவர்கள் பேரணியாக சென்று கழக அரசின் சாதனைகளை விளக்கும் பிரசுரங்களை கடைகள் மற்றும் வீடுகள்தோறும் வழங்கினர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான கழக அரசின் சாதனைகளை விளக்கி, ஈரோடு புறநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், நடைபெற்ற லட்சியப் பேரணியை அமைச்சர் திரு. தோப்பு N.D. வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். கழக அரசின் சாதனைகளை விளக்கும் பிரசுரங்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைகவசங்களை அமைச்சர் வழங்கினார். இப்பேரணியில், நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. சத்தியபாமா, சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை செயலாளர் திரு. எஸ்.எஸ். ஆறுமுகம் உள்ளிட்ட கழகத்தினர் திரளாக கலந்துகொண்டனர்.

கோவை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற சாதனை விளக்க லட்சியப் பேரணியை மாவட்; கழக செயலாளர் திரு. பி.ஆர்.ஜி. அருண்குமார் துவக்கி வைத்து, சாதனை விளக்க பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தார். இப்பேரணியில் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக அமைப்பு நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

திருச்சி மாநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், திருச்சி மாநகர் சத்திரம் பேருந்து நிலையம், கடைவீதி, மெயின் ரோடு, அண்ணா சிலை போன்ற பல்வேறு பகுதிகளில் சாதனை விளக்க லட்சியப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை அமைச்சர் திரு. T.P. பூனாட்சி, கழக பாசறை மாநில செயலாளர் திரு. ப. குமார் எம்.பி, அரசு தலைமைக் கொறாடா திரு. ஆர். மனோகரன், கழக அமைப்பு செயலாளர் திருமதி. எஸ். வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சேலம் புறநகர் ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், தலைவாசல் மார்க்கெட் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பேரணி நடைபெற்றது. அப்போது கழக அரசின் சாதனைகளை விளக்கும் பிரசுரங்கள் வீடுகள்தோறும் வழங்கப்பட்டது. பேரணியில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கே. காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நாகை மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில் வேளாங்கன்னியில் நடைபெற்ற லட்சியப் பேரணியை அமைச்சர் திரு. கே.ஏ. ஜெயபால் துவக்கி வைத்தார். வேளாங்கன்னி கடைவீதியில் சாதனை விளக்க பிரசுரங்கள் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் வழங்கப்பட்டது.

இதேபோல் தமிழகத்தின் பிறமாவட்டங்களிலும் ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில் லட்சியப் பேரணி நடத்தப்பட்டு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான கழக அரசின் சாதனைகளை விளக்கும் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00