முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் : முதலமைச்சருக்கு பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

Feb 5 2016 7:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, சிறப்புத் திட்டங்களின் கீழ், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளைச் சேர்ந்த 21 ஆயிரம் பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை அமைச்சர் திரு. கே.ஏ. ஜெயபால் வழங்கினார். தொடர்ந்து, சீர்காழியில் 8,979 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை அமைச்சர் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் ஆயிரத்து 646 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை அமைச்சர் முக்கூர் திரு. என். சுப்பிரமணியன் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், இருளப்பபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆயிரத்து 962 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டன. இத்துடன், நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர், சண்முகா நகர், திருநகர் உள்ளிட்ட பகுதிகளில், 819 இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டன.

இதனிடையே, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில், நேற்று பிறந்த குழந்தைகளுக்கு, "அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன. அ.இ.அ.தி.மு.க. மாநிலங்களவை குழு துணைத் தலைவர் திரு. எஸ். முத்துக்கருப்பன், திருமதி. விஜிலாசத்தியானந்த் M.P. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். குழந்தை பிறந்த அன்றே 16 வகையான பொருட்கள் அடங்கிய பரிசுப் பெட்டகங்கள் வழங்கிய, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு தாய்மார்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரத்தில் இருந்து கலையனூர், பொட்டகவயல், திருப்புல்லாணியிலிருந்து கீழக்கரை, பெரியபட்டிணம், களிமண்குண்டு ஆகிய 5 புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை தொடக்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அன்வர்ராஜா மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00