முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரி மாணாக்கர்கள் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் சேர சிறப்பு மாற்றுக் கலந்தாய்வு

Feb 4 2016 1:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் இயங்கி வந்த எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரி மாணாக்கர்கள், சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்படுவார்கள் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த சிறப்பு மாற்றுக் கலந்தாய்வு வரும் 10-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா இந்தியமுறை மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு மாற்றுக் கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதி பெற்ற மாணாக்கர்கள் விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்.வி.எஸ். யோகா மற்றும் மருத்துவக் கல்லூரியில் 2008-2009-ம் ஆண்டு முதல் 2014-2015-ம் ஆண்டுகளில் இணைந்து அவர்களது பெயர்கள் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். 2015-2016-ம் கல்வியாண்டில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தால் வழங்கப்பட்ட இருக்கை விவர அடிப்படையில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையரக தேர்வுக் குழுவால் வழங்கப்பட்ட இடஒதுக்கீடு ஆணையின்படி, எஸ்.வி.எஸ் கல்லூரியில் இணைந்து பட்டப்படிப்பு படித்து வரும் மாணாக்கர்களும் தகுதி பெற்றவர்களாவர். கல்லூரி மாற்றம் தொடர்பான சிறப்பு கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா இந்திய முறை மருத்துவமனை வளாகத்தில் அமைந்திருக்கும் தேர்வுக்குழு அலுவலகத்தில் 10-ம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெறும். இதற்கு வரும் மாணாக்கர்கள் கல்லூரி நிர்வாகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, மாணவரின் பெயர் மற்றும் புகைப்படம் இடம்பெற்ற ஏதேனும் ஒரு அசல் அடையாள சான்றிதழ், பல்கலைக் கழகத்தால் வழங்கப்பட்ட ஏதேனும் தேர்வுக்கான நுழைவுச் சான்றிதழ், எஸ்.வி.எஸ். கல்லூரியால் வழங்கப்பட்ட கல்வி கட்டண ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துவர வேண்டும் என அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00