முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி, 2011-ம் ஆண்டு முதல், இதுவரை தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 72,843 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு சாதனை

Feb 4 2016 1:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

அனைவருக்கும் தரமான கல்வி கிடைத்திடும் வகையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுபடி, 2011-ம் ஆண்டு முதல், இதுவரை தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 72,843 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு, ஒரு சரித்திர சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளின் தரத்தை உயர்த்தி, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி - போதிய ஆசிரியர்களை உடனுக்குடன் நியமனம் செய்து, சிறந்த கல்வி வழங்க முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். 2012-ம் ஆண்டு, தகுதி தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்ட சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நியமன ஆணைகளை வழங்கினார். இதுவரை மொத்தம் 72 ஆயிரத்து 843 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, தேசிய சராசரி விகிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விஞ்சும் வகையில், 28 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வரலாற்று சாதனை நிகழ்வு எட்டப்பட்டுள்ளது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, பள்ளிக் கல்வித்துறையில் இளநிலை உதவியாளர், உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு 14 ஆயிரத்து 711 பேர் நியமனம் செய்யப்பட்டு, காலி பணியிடங்களே இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக பணியாளர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00