முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள், மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் மற்றும் மிதிவண்டிகள் வழங்கும் பணி தீவிரம்

Oct 8 2015 8:09AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்புத் திட்டங்களின் கீழ், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள், மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் மற்றும் மிதிவண்டிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சோமரசம்பேட்டை, எட்டரை, அயிலாப்பேட்டை ஆகிய பகுதிகளில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 520 மாணவ-மாணவியருக்கும், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 437 மாணவ-மாணவியருக்கும் விலையில்லா மடிக்கணினிகளை அரசு தலைமைக் கொறடா திரு. ஆர். மனோகரன் வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில், நாடாளுமன்ற உறுப்பினர் ப. குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வேலூர் மாவட்டம் சோளிங்கர், ஜங்காலப்பள்ளி ஆகிய பகுதிகளில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 189 மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இதில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. திருத்தணி கோ. அரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல், வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பேர்ணாம்பட்டு பகுதியில் உள்ள இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நுஸ்ரத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளி, ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் ஆயிரத்து 63 மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பா. செங்குட்டுவன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில், 80 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் திரு. உதயகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் பயிலும் 483 மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட அட்டடி, காந்திநகர் ஆகிய இடங்களில், ஆயிரத்து 92 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்காந்த அடுப்புகள் வழங்கப்பட்டன. தாட்கோ தலைவர் திரு. கலைச்செல்வன் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சூர்யா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்து 986 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டன.

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே நாகல்குளம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 590 இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடியில், அரசு உதவி பெறும் தனியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 360 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00