இந்தியா முழுவதும் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 20 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது - தமிழகத்தில் மிகக்குறைந்த அளவில் இருப்பதாக சட்டப்பேரவையில் தகவல்

Aug 31 2015 10:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், தமிழகத்தில் கரும்பு சாகுபடி குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்திருப்பதாகவும், கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை நாட்டிலேயே தமிழகத்தில்தான் மிகவும் குறைவு என்றும் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர் திரு. தைலப்பனுக்கு இரங்கல் தெரிவித்து, 2 நிமிடம் மவுனம் கடைப்பிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் திரு. P. தங்கமணி, கரும்புக்கான குறைந்தபட்ச விலையாக அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டட, 2,500 ரூபாயைக் காட்டிலும், அதிகமாக தற்போது டன்னுக்கு 2,650 ரூபாய் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், நாடு முழுவதும் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய 20 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத்தொகையில், தமிழகத்தில்தான் குறைந்த அளவு நிலுவைத்தொகை உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தஞ்சாவூர் மாட்டம் பட்டுக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆகிய இடங்களில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஒப்புதலைப் பெற்று ஒருங்கிணைந்த சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும் என்று அமைச்சர் திரு. எம்.சி. சம்பத் தெரிவித்தார்.

தி.மு.க. ஆட்சியின் போது, தரம் குறைக்கப்பட்ட அருப்புக்கோட்டை கால்நடை மருத்துவமனையை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் அனுமதி பெற்று, மீண்டும் நவீன வசதிகளுடன் கூடிய கால்நடை மருத்துவமனையான தரம் உயர்த்தத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் திரு. T.K.M. சின்னையா உறுதியளித்தார். தமிழக கால்நடைத்துறை வரலாற்றில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர்தான், கடந்த 4 ஆண்டுகளாக ஆண்டுக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை கால்நடை பராமரிப்புத் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கால்நடை பராமரிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00