நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, சென்னையில் மணிமண்டபம் - முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு குவியும் பாராட்டு - போற்றுதலுக்குரிய அறிவிப்பு என அகில இந்திய தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் டெல்லி தமிழ்ச்சங்கம் பாராட்டு

Aug 29 2015 6:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசனின் நினைவைப் போற்றும் வகையில், தமிழக அரசு சார்பில், சென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, டெல்லி தமிழ்ச்சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்களை ஏற்று, அற்புதமாக நடித்து புகழ்பெற்ற நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசனின் கலைச் சேவையைப் பாராட்டும் வகையிலும், அவரது நினைவைப் போற்றும் வகையிலும், தமிழக அரசு சார்பில், சென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து நன்றியும், பாராட்டும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குபவர்களை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா போற்றி பாராட்டி வருகிறார் எனவும், நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சரின் இந்த அறிவிப்பை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பதாகவும் அகில இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பும், டெல்லி தமிழ்ச் சங்கமும் பாராட்டு தெரிவித்துள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00