அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பொறியியல் கலந்தாய்வு : தொழில் பிரிவு மாணவர்களுக்கான கடைசி கட்ட கலந்தாய்வில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடங்களை தேர்வு

Jul 31 2015 9:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்று வரும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. தொழில் பிரிவு மாணவர்களுக்கான கடைசி கட்ட கலந்தாய்வில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மூலம் மாணவ-மாணவிகள் சேருவதற்கான கலந்தாய்வு, கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. சிறப்பு பிரிவுகளைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக் கலந்தாய்வு கடந்த 28ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், ப்ளஸ் டூ படிப்பில் தொழில் பிரிவைத் தேர்ந்தெடுத்து பயின்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு, அண்ணா பல்கலைக் கழகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. 3,500 மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அன்றைய தினம் சுமார் ஆயிரம் பேர் தங்களுக்குரிய கல்லூரிகளை தேர்வு செய்தனர். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் இறுதிச் சடங்குகளை முன்னிட்டு, தமிழகத்தில் நேற்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டதால், 2-ம் நாளாக நடைபெறவிருந்த கலந்தாய்வு, இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, இக்கலந்தாய்வு இன்று நடைபெற்று வருகிறது. கடைசிக்கட்டமாக மாணவ, மாணவிகள் தங்களுக்குரிய கல்லூரிகளை தேர்வு செய்து வருகின்றனர். இன்று மாலையுடன் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முடிவுக்கு வருகிறது. முதலாண்டு வகுப்பில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு வரும் 3-ம் தேதி வகுப்புகள் தொடங்குகின்றன. இதனிடையே, ப்ளஸ் 2 துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பொறியியல் படிப்பில் சேர இன்று விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00