மன்னார் வளைகுடா பகுதியில் 8 சதுர கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்ட செயற்கை பவளப்பாறைகள் : மீன்வளம் அதிகரித்திருப்பதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் தகவல்

Jul 31 2015 6:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் தூத்துக்குடி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 8 சதுர கிலோ மீட்டர் தொலைவுக்கு செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு மீன்வளம் அதிகரித்துள்ளதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் மிக முக்கியமான கடல்பகுதிகளில் மன்னார் வளைகுடாவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். வேறெங்கும் காணக்கிடைக்காத அரிய வகை மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் இங்கு காணப்படுகின்றன. இங்கு இயற்கையாக அமையப்பெற்ற பவளப்பாறைகளே இதற்கு காரணமாகும். ஆனால், அப்பகுதியில் அவ்வப்போது ஏற்பட்டு வரும் இயற்கை சீற்றங்களினால் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்கான பவளப்பாறைகள் வெகுவாக குறைந்து விட்டன.

இதுகுறித்த ஆய்வின் அடிப்படையில், தமிழக அரசு மன்னார்வளைகுடா கடல்பகுதியில் செயற்கையான பவளப்பாறைகளை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை 8 கிலோ மீட்டர் தூரம் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் பலனாக அங்கு மீன்வளம் அதிகரித்திருப்பதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடலில் உள்ள இந்த அரியவகை பவளப்பாறைகள், மீன்கள் தங்கி இனப்பெருக்கும் செய்வதற்கு ஏதுவாகவும், மிதமான தட்பவெட்பநிலையை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00