டாக்டர் அப்துல்கலாம் இறுதிச் சடங்கையொட்டி, 7 அமைச்சர்களை அனுப்பி, அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாகச் செய்த, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, கலாம் குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றி

Jul 31 2015 6:24AM
எழுத்தின் அளவு: அ + அ -

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் A.P.J. அப்துல் கலாமின் உடலை, ராமேஸ்வரம் கொண்டு வந்து, உடல் நல்லடக்கம் செய்யப்படும் வரை, தமிழக அரசின் சார்பில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அனுப்பி வைத்த 7 அமைச்சர்கள் உடனிருந்து, அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாக செய்ததற்காக, அப்துல் கலாமின் குடும்பத்தினர், முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

டாக்டர் அப்துல் கலாமின் மறைவுச் செய்தி அறிந்ததும், முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்ததுடன், இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார். மேலும், டாக்டர் அப்துல் கலாம் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டுள்ள தாம், உடல்நிலை கருதி, அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இயலவில்லை என்றும், தமது சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் 7 அமைச்சர்கள், டாக்டர் அப்துல்கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்பார்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

டாக்டர் கலாமின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ராமேஸ்வரம் பகுதியில், அவரது உடலை அடக்கம் செய்வதற்கான நிலத்தை தமிழக அரசு ஒதுக்குவதற்கு, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா உத்தரவிட்டதுடன், கலாமின் இறுதிச் சடங்குகளையொட்டி, தமிழகத்தில் நேற்று பொது விடுமுறையாக அறிவிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.

தமது சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் 7 அமைச்சர்களை ராமேஸ்வரத்திற்கு அனுப்பி, டாக்டர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு, உடல் நல்லடக்கம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கடந்த 3 நாட்களாக முழு அளவில் நிறைவேற்றித் தந்துள்ள முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவுக்கு, டாக்டர் அப்துல்கலாம் குடும்பத்தினர் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதுடன், நேற்று பொது விடுமுறையும் அறிவித்து, இறுதிச் சடங்குகள் பலத்த பாதுகாப்புடன் அமைதியாக நடந்து முடிவதற்கு, அனைத்து ஏற்பாடுகளையும் செய்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, டாக்டர் கலாமின் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00