பொதுமக்கள் அஞ்சலிக்காக ராமேஸ்வரம் கீழக்காடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் உடல் ராணுவ வாகனம் மூலம் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது

Jul 30 2015 6:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

பொதுமக்கள் அஞ்சலிக்காக ராமேஸ்வரம் கீழக்காடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் உடல் ராணுவ வாகனம் மூலம் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

மறைந்த டாக்டர் அப்துல்கலாமின் உடலுக்கு ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தை அடுத்த கீழக்காட்டில், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவ-மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து, அவரது உடல், நேற்றிரவு 8 மணிக்கு கீழக்காட்டிலிருந்து ராணுவ வாகனம் மூலம் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை 8 மணிக்கு டாக்டர் அப்துல் கலாமின் உடல் அங்குள்ள பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு துஆ நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து, காலை 11 மணியளவில் டாக்டர் அப்துல் கலாமின் இறுதி ஊர்வலமும், பின்னர் தமிழக அரசு சார்பில் பேய்கரும்பு என்ற இடத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தில் நல்லடக்கமும் நடைபெறுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00