முதலமைச்சர் ஜெயலலிதா உரிய காலத்தில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டதால், தூத்துக்குடி மாவட்டத்தில் கார்நெல் சாகுபடி பணிகள் தீவிரம் - அமோக விளைச்சல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி

Jul 4 2015 7:06AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உரிய காலத்தில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டதாலும், உரம் போன்ற இடுபொருட்கள் தாரளமாக வழங்கப்பட்டு வருவதாலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பாசன பகுதிகளான கடம்பாகுளம், தென்திருப்பெரை, மேலகரந்தை, மனத்தி, ஆகிய பகுதிகளில் கார் சாகுபடியாக 5 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி, தட்டுப்பாடில்லாமல், உரம் கிடைத்து வருவதாலும், பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அரபிக்கடல் பகுதிகளில் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருவதால், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் படகுகளை பழுதுபார்க்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், தடைக்காலத்தில் 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை தமிழக அரசு வழங்கி வருவதால், மீனவ அமைப்புகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளன.

சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் மலைவாழ் மக்கள் செண்பனூர், வில்பட்டி, கவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் கேரட் பயிரிட்டுள்ளனர். தற்போது கேரட் அதிக விளைச்சல் கண்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இங்கு விளையும் கேரட், மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் மலைவாழ் மக்களுக்கு நல்ல வருமானம் கிடைத்து வருவதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00