தங்கம் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,760க்கு விற்பனை : கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.5,845க்கு விற்பனை
Jan 13 2024 10:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 845 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 46 ஆயிரத்து 760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து 78 ரூபாய்க்கும், கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து 78 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது.