திருவாரூர்: அமமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக செயல்படும் அரசு அதிகாரிகள் - கிராம மக்கள் சாலைமறியல்

Nov 26 2022 3:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் அமமுக தலைமையிலான ஊராட்சி மன்ற நிர்வாகத்தை செயல்படவிடாமல் தடுக்கும் ஆளும் திமுக அரசையும், அதற்கு துணைபோகும் அதிகாரிகளையும் கண்டித்து கிராம மக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

மன்னார்குடியை அடுத்துள்ள எடகீழையூர் ஊராட்சி, எடஅண்ணவாசல், வடக்கு உடையார் தெரு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது. அமமுகவை சேர்ந்த மல்லிகா செல்வராஜ் என்பவர் இந்த ஊராட்சியின் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

கடந்த சட்டமன்றத்தேர்தலில் அமமுக வேட்பாளருக்கு இங்கு அதிக வாக்குகள் கிடைத்ததால் ஆத்திரம் அடைந்த ஆளும் திமுகவினர், இந்த ஊராட்சி நிர்வாகத்தை முடக்கும் நோக்கில் அதிகாரிகளின் துணையுடன் தொடர்ந்து காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த ஒன்றை ஆண்டுகாலமாக இங்கு எந்த ஒரு அத்தியாவசிய பணிகளையும் செய்யவிடாமல் நீடாமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு திமுகவினர் நெருக்கடி அளித்து வருகின்றனர். 100 நாட்கள் வேலை திட்டம், கிராமசாலை வசதிகள் உள்ளிட்ட அரசின் பணிகள் எதனையும் செய்யவிடாமல், ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்கின்றனர். இவற்றுக்கு எதிராக பல்வேறு புகார்களை தெரிவித்தும் தீர்வு காணப்படவில்லை. இதனால் அதிருப்திக்குள்ளான கிராம மக்கள் இன்று நூற்றுக்கணக்கில் திரண்டு சாலை மறியல் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00