டிக்கெட் வாங்கும் அனைவரும் பாப்கான் சேர்த்து வாங்க வேண்டும் : சேலத்தில் ரசிகர்களை திரையரங்கு உரிமையாளர்கள கட்டாயப்படுத்துவதாக புகார்

Oct 6 2022 4:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலத்தில் உள்ள பிரபல திரையரங்கில் டிக்கெட் வாங்கும் அனைவரும் கட்டாயம் பாப்கான் சேர்த்து வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதாக ரசிகர்கள் வீடியோ ஆதாரத்துடன் குற்றம் சாட்டியுள்ளனர்.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல தனியார் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தரமற்ற குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, திரையரங்கில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேல் ஆய்வு மேற்கொண்டு, கெட்டுப்போன உணவு பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் அதே திரையரங்கில் டிக்கெட் வாங்கும் அனைவரும் கட்டாயம் பாப்கானும் சேர்த்து வாங்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று இரவு பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்க்க குடும்பத்துடன் திரையரங்குக்கு வந்தவரிடம், 17 டிக்கெட்களுக்கும் 17 பாப்கான் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தி திரையரங்கு நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதுபோன்று கட்டாயப்படுத்தும் திரையரங்கு மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00