திருப்பூர் அருகே ஆதரவற்றோர் காப்பகத்தில் காலை உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் - இறப்பில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரால் பரபரப்பு

Oct 6 2022 3:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூரில் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 குழந்தைகளும் நேற்றிரவே உயிரிழந்துவிட்டதாகவும், துர்நாற்றம் வீசியதாகவும் அப்பகுதி மக்‍கள் குற்றம் சாட்டியுள்ளதால், குழந்தைகள் மரணத்தில் மர்மம் நீடிக்‍கிறது.

திருப்பூர் அவிநாசி சாலை, தூண்டில் ரிங் ரோட்டில் உள்ள விவேகானந்தா சேவாலயம் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்‍கு உடல்நலம் பாதிக்‍கப்பட்டது. இதையடுத்து, திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் அனுமதிக்‍கப்பட்டனர். கவுதம், சதீஷ், தர்னிஸ், சபரி, குணா, ரித்திஸ், ஹர்ஷத், கவின் குமார் உள்ளிட்ட 11 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாதேஷ், பாபு, அத்தீஷ் ஆகிய சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனிடையே, இந்த 3 குழந்தைகளும் நேற்றிரவே உயிரிழந்துவிட்டதாகவும், தூர்நாற்றம் வீசியதாகவும் அப்பகுதி மக்‍கள் குற்றம் சாட்டியுள்ளனர். குழந்தைகள் இறந்தநிலையில் தரையில் கிடப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதனால் குழந்தைகள் மரணத்தில் மர்மம் நீடிக்‍கிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00