சென்னை: கல்லூரி மேம்பாட்டுக்கு ரூ.200 கோடி கடன் பெற்று தருவதாக மோசடி - மூன்று பேர் கைது

Jul 5 2022 5:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

கல்லூரி மேம்பாட்டுக்கு 200 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக்‍ கூறி, ஐந்தரை கோடி ரூபாய் பணத்தை கமிஷனாக வாங்கிக் கொண்டு ஏமாற்றிய மூன்று பேரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரையில் சேது பொறியியல் கல்லூரியை நடத்தி வருபவர் முகமது ஜலீல். இவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், "சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த லையன் முத்துவேல் என்பவர், தன்னை பெரிய பைனான்சியர் என அறிமுகமானதாகவும், அவரது கூட்டாளிகள், மற்றும் தரகர்கள் மூலம் கல்லூரியை விரிவுபடுத்துவதற்கும், மேம்பாட்டுக்காகவும் 200 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாகவும் கூறி நம்ப வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இப்படி கடன் பெற்றுத்தர 2 சதவீதம் கமிஷனாக, 5 கோடியே 46 லட்சம் ரூபாய் பணத்தையும் முத்துவேல் பெற்றுக்கொண்டார். ஆனால் கூறியபடி கடன் ஏற்பாடு செய்து தரவில்லை என்றும், வாங்கிய பணத்தை திரும்ப தரவில்லை என்றும், இதனால் லையன் முத்துவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் முகமது ஜலீல் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்களை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையாளர் ஜான் விக்டர் தலைமையிலான காவல்குழுவினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு தலைமறைவாக இருந்த லயன் முத்துவேல், அவரது கூட்டாளிகள் சங்கர், இசக்கியேல் ராஜன் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக்‍ காவலில் சிறையில் அடைத்தனர்.

இதில் கைதான லயன் முத்துவேல், ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது திமுகவின் பகுதி அமைப்பாளராக இருந்த அவர், 100 கோடி ரூபாய் வங்கிக்‍கடன் வாங்கித் தருவதாக, ராஜஸ்தானை சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபரை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டில் முத்துவேல் ஏற்கனவே கைதாகி சிறைக்கு சென்று வந்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00