திருப்பூரில் விவசாயிகளுக்‍கு இலவச மின் இணைப்பு வழங்கியதாக கூறி மோசடி : மின் பகிர்மான அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

May 20 2022 6:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விவசாயிகளுக்‍கு தமிழக அரசால் அறிவிக்‍கப்பட்ட ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கிய​தில் மோசடி நடைபெற்றதாக கூறி பல்லடம் மின் பகிர்மான கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம், சூலூர் வட்டம், சாலைப்புதூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு லட்சம் இலவச வேளாண் மின் இணைப்புகள் வழங்காமலேயே அரசுக்கு தவறான தகவல்களை அளித்து, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சம்பந்தமே இல்லாத நபர்களை வைத்து புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்து உள்ளதாக கூறி விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த முறைகேடு குறித்து பல்லடம் மின்சார வாரிய அதிகாரிகளை கண்டித்தும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், பல்லடம் மின் பகிர்மான அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00