தக்காளி விலையை தொடர்ந்து மற்ற காய்கறி விலையும் கிடுகிடு உயர்வு - தூத்துக்குடி காய்கறி சந்தையில் காய்கறிகள் விலை இருமடங்கு அதிகரிப்பு

May 20 2022 2:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

தக்காளியின் விலை 100 ரூபாயை எட்டிய நிலையில், தூத்துக்குடி காய்கறி சந்தையில் மற்ற காய்கறிகளின் விலையும் இருமடங்கு உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி காய்கறி சந்தைக்கு மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். இந்நிலையில் ஓசூர் கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் பெய்த மழையினாலும் விளைச்சல் குறைவு காரணமாகவும், தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் ஆந்திராவில் இருந்து தூத்துக்குடி காய்கறி சந்தைக்கு மிக குறைந்த அளவே தக்காளி வரத்து உள்ளதால் அதன் விலை திடீரென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி தற்பொழுது 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதைப்போல வெளி மாவட்டங்களில் இருந்து வரும் கத்திரிக்காய் கிலோ 60 ரூபாயாகவும், பீன்ஸ் கிலோ 90 ரூபாய்க்கும், அவரைக்காய் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலையேற்றம் பொதுமக்களை பெரிதும் பாதித்ததுள்ளதுடன், விற்பனையும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00