கல்லணை கால்வாயில் அமைக்‍கப்படும் கான்கிரீட் தளத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்‍கும் அபாயம் - நீர் மேலாண்மை திட்டத்தை கைவிட விவசாயிகள் கோரிக்‍கை

May 20 2022 12:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

கல்லணை கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருச்சி கல்லணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், கடைமடை வரை முறையாக சென்று பாசனத்திற்கு பயன்படும் வகையில் புதுப்பித்தல் மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்லணைக் கால்வாயின் பிரதான வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் தொடங்கி தற்போது திருச்சி கிளியூர் பகுதியில் இப்பணி நடைபெற்று வருகிறது. கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும், கான்கிரீட் தளத்தின் அளவு உயர்த்தப்படுவதால், வெள்ள நீரை தாங்கும் திறன் இல்லாமல் உடைப்பு ஏற்படும் என்றும் அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும் அல்லது தற்போது நடைபெறும் பணிகளின்போது 3 கிலோ மீட்டர் இடைவெளியில் ஆங்காங்கே தடுப்பணைகளை ஏற்படுத்தி தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00