SC, ST மாணவர்கள் ஒதுக்‍கீடு செய்யப்பட்ட ரூ.925 கோடியை மாணவர்களின் நலன்களுக்‍கே செலவிட வேண்டும் என கோரி தொடரப்பட்ட வழக்‍கு : தமிழக அரசு விளக்‍கம் அளிக்‍க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

May 19 2022 7:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள், உயர்கல்வி பெற அரசு ஒதுக்‍கிய பணத்தை மீண்டும் செலவிடக்‍கோரி தொடரப்பட்ட வழக்‍கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் பதிலளிக்‍க, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த எஸ்.கார்த்திக் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்கும் உயர்கல்வி பெறுவதற்கான பொருளாதார தேவை, முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத நிலையில், நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை பயன்படுத்தப்படாமல் திருப்பி ஒப்படைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்களுக்காக ஒதுக்கிய தொகையில் பயன்படுத்தப்படாமல் 927 கோடியை அரசிடம் திரும்ப ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருப்பதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் அப்துல்குத்தூஸ், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் 4 வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00