முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்‍குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு - சென்னை ஆயிரம் விளக்‍கு பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு சீல் வைப்பு

Oct 19 2021 11:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 23 லட்சம் ரூபாய் ரொக்கம், சுமார் 5 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனைதொடர்ந்து சென்னையில் உள்ள விஜயபாஸ்கருக்‍கு தொடர்புடைய அலுவலகத்திற்கு சீல் வைக்‍கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்கள், அவரது நண்பர்கள், உறவினர்கள் என சுமார் 50 இடங்களில், லஞ்ச ஒழிப்புதுறையினர் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், இதுவரை 23 லட்சத்து 85 ஆயிரத்து 700 ரூபாய் ரொக்கம், 4 கிலோ 87 கிராம் தங்கம், 136 கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழ்கள் மற்றும் சொத்து பரிவர்த்தனை ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு வழக்குகளுடன் தொடர்புடைய 19 ஹார்டு டிஸ்குகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, திரு.எம்.ஆர். விஜயபாஸ்கர், திரு.எஸ்.பி. வேலுமணி, திரு.கே.சி.வீரமணி என முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது. அந்த வரிசையில் திரு.சி.விஜயபாஸ்கரும் தற்போது சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தனது வீட்டில் இருந்து நகை, பணம் மற்றும் ஆவணங்கள் என எதுவும் சோதனையின் போது கைப்பற்றப்படவில்லை என திரு.விஜயபாஸ்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனிடையே சென்னை ஆயிரம் விளக்‍கு பகுதியில் உள்ள விஜயபாஸ்கருக்‍கு சொந்தமான அலுவலகத்திற்கு சீல் வைக்‍கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00