தி.மு.க கட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முக்கியத்துவம் இல்லை : தி.மு.க வேட்பாளருக்கு எதிராக களமிறங்கிய தி.மு.க. நிர்வாகி குற்றச்சாட்டு

Sep 22 2021 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
தி.மு.க.வில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முக்கியத்துவம் இல்லை என அக்‍கட்சி வேட்பாளருக்கு எதிராக போட்டியிடும், மற்றொரு திமுக வேட்பாளரே தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தி.மு.க கட்சி வேட்பாளர்களுக்‍கு எதிராக அக்‍கட்சியைச் சேர்ந்தவர்களே போட்டியிடுகிறார்கள். ஆறாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து அக்‍கட்சியை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் களமிறங்கியுள்ளார். இதுகுறித்து சுந்தர்ராஜன் கூறும்போது, திமுக கட்சியில் பட்டியலின மக்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்றும், திமுக வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.

ஒரே ஊராட்சி ஒன்றிய பதவிக்‍கு, இரண்டு தி.மு.க வேட்பாளர்கள் களமிறங்கியிருப்பது, அக்‍கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00