போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞர் முன்ஜாமின் மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Jun 18 2021 5:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் ஊரடங்கின் போது விதிமுறைகளை மீறியதாக கூறப்பட்ட விவகாரத்தில் போலீசாருடன் வாக்குவாதத்தில் பெண் வழக்கறிஞரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 6-ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டு அருகே ஊரடங்கின் போது, விதிகளை மீறி காரில் வந்த பெண்ணிற்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதனை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அப்பெண்ணின் தாயாரும், வழக்கறிஞருமான தனுஜா ராஜா, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களை ஒருமையில் பேசி பணி செய்யவிடாமல் தடுத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான சூழலில், அந்த பெண் வழக்கறிஞர் மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே அந்த பெண் வழக்கறிஞர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு முன்ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்தது. இந்நிலையில், முன்ஜாமின் கேட்டு தனுஜா ராஜா மற்றும் அவரது மகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி தண்டபாணி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞர் தனுஷா ராஜாவின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார். அதேசமயம், வழக்கறிஞரின் மகளுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி அவர் உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி, தவறு செய்யும் வழக்கறிஞர் மீது பார் கவுன்சில் தாமாக முன் வந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விதிகளை கொண்டு வரவேண்டும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலுக்கு அறிவுறுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00