தமிழகத்தில் நீட் தேர்வு பயிற்சி தொடர்ந்து நடைபெறும் - சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி

Jun 18 2021 3:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் நீட் தேர்வுக்‍கு விலக்‍கு பெறும்வரை அந்தத் தேர்வுக்‍கான பயிற்சி தொடர்ந்து நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்விலிருந்து விலக்‍கு அளிக்‍க வேண்டுமென பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தியதாக தெரிவித்தார். நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்ய நீதியரசர் திரு. ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்‍கப்பட்டிதாக குறிப்பிட்ட திரு. மா. சுப்பிரமணியன், நீட் தேர்விலிருந்து விலக்‍கு பெறும்வரை அந்தத் தேர்வுக்‍கான பயிற்சி தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தலின்போது தி.மு.க. உறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்‍கு வந்தபின்னர், அதுதொடர்பாக உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்‍கவில்லை. டெல்லியில் நேற்று பிரதமரை சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்ய பிரதமரிடம் வலியுறுத்தியதாக கூறினார். இந்தச் சூழலில் நீட் தேர்வுக்‍கான பயிற்சி தொடர்ந்து நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00