ஆன்லைன் வீடியோ கேமில் ஆபாச பேச்சு மூலமே பல கோடி ரூபாய் வரை பணம் சம்பாதித்த 'பப்ஜி' மதன் மற்றும் மனைவி - விலை உயர்ந்த ஆடம்பர சொகுசு கார்களை பறிமுதல் செய்து காவல்துறை நடவடிக்கை

Jun 18 2021 2:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆபாச பேச்சு மற்றும் பண மோசடி புகாரில் தேடப்பட்டு வந்த பப்ஜி மதன் கைது செய்யப்பட்டுள்ளார். மதன் கைது செய்யப்பட்டதையடுத்து அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

பெண்களை ஆபாசமாக பேசியது, சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியது, ஆன்லைனில் பண மோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட புகாரில் பப்ஜி மதன் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில், தருமபுரியில் பதுங்கியிருந்த மதனை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து, மதனின் ஆபாச பேச்சுகள் அடங்கிய சிடியை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்‍கல் செய்த போலீசார், மதன் இன்று காலை கைது செய்யப்பட்டதாகவும், இன்று மாலை சென்னைக்‍கு அழைத்து வரப்படுவார் என்றும் தெரிவித்தனர். மதன் கைது செய்யப்பட்டதையடுத்து அவரது முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பப்ஜி மதனின் மனைவி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்‍கப்பட்ட நிலையில், பப்ஜி கேமில் மதனுடன் இணைந்து ஆபாசமாக பேசிய அவரது தோழிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00