நோயாளிகளை ஏற்றி செல்லும் தனியார் ஆம்புலன்ஸ்களுக்‍கான கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு

May 15 2021 10:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

நோயாளிகளை ஏற்றி செல்லும் தனியார் ஆம்புலன்ஸ்களுக்‍கான கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பல மடங்கு கட்டணம் வசூலித்ததை தொடர்ந்து, பொதுமக்‍களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து, தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்‍கான கட்டணத்தை 3 வகைகளாக பிரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சாதாரண ஆம்புலன்ஸ்களுக்கு 10 கிலோ மீட்டருக்‍கு ஆயிரத்து 500 ரூபாயும், ஆக்‍ஸிஜன் சிகிச்சை வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், வெண்டிலேட்டர் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்களுக்கு 4 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்‍கப்பட்டுள்ளது.

10 கிலோ மீட்டருக்‍கு மேல் கூடுதலாக சென்றால், சாதாரண ஆம்புலன்ஸ்கள் ஒரு கிலோ மீட்டருக்‍கு 25 ரூபாய் வசூலிக்‍கலாம் என்றும், ஆக்‍ஸிஜன் வசதியுள்ள ஆம்புலன்ஸ்கள் 50 ரூபாய் வசூலிக்‍கலாம் எனவும், அதிநவீன வசதி கொண்ட ஆம்புலன்ஸ்கள் 100 ரூபாய் வசூலிக்‍கலாம் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு அதிகமாக வசூலித்தால், 104 என்ற எண்ணில் புகார் செய்யலாம் என்றும், அதிக கட்டணம் வசூலிக்‍கும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00