சின்னம்மா நலம் பெற வேண்டி தொடர் வழிபாடு - ஊட்டி, ஆத்தூர், கடலூர், திருச்சியில் பல்வேறு கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்

Jan 25 2021 6:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

தியாகத்தலைவி சின்னம்மா, பூரண உடல்நலம் பெற்று, நீண்ட ஆயுளுடன், சிறப்பாக வாழ வேண்டி, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.

நீலகிரி மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் திரு.எஸ். கலைச்செல்வன் தலைமையில் கூடலூர் அருகே குந்தலாடி முத்து மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் திரு.தம்பி இஸ்மாயில், மாவட்ட அவை தலைவர் திரு.துரை, ஒன்றிய செயலாளர் கனேசன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி தெற்கு ஒன்றியம், நகர கழகம் சார்பில் செல்வ மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தெற்கு ஒன்றிய செயலாளர் திரு.தங்கராசு, நகர செயலாளர் திரு.வெங்கடாஜலம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஆத்தூர் அருகே கெங்கவல்லி சட்டமன்ற அமமுக சார்பில் பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. கழக அமைப்பு செயலாளரும் சேலம் புறநகர் மாவட்ட செயலாளருமான திரு.எஸ்.கே. செல்வம், மாவட்ட அவைத் தலைவர் திரு.சண்முகம், மாவட்ட பொருளாளர் திரு. மாதேஸ்வரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கடலூர் மேற்கு மாவட்டம் அண்ணாமலை நகர் பேரூராட்சி கழகம் சார்பாக கொத்தங்குடிதோப்பு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வல்லடிகாரர் சுவாமி திருக்கோவிலில் சிறப்புஅபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் கழக அமைப்பு செயலாளருமான திரு.கே.எஸ்.கே பாலமுருகன், அண்ணாமலை நகர் பேரூராட்சி செயலாளர் திரு.ஏ.அறிவழகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திருச்சி வடக்கு மாவட்டம் லால்குடி தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் அன்பில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கழக பொருளாளரும், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான திரு.ஆர்.மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் திரு. விஜய மூர்த்தி, திரு. முடியரசன் உள்ளிட்ட கழகத்தினர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாநகர் மாவட்ட கழகம் மற்றும் ஏர்போர்ட் பகுதி கழகம் சார்பில் பிறாயடி கருப்பண்ணசாமி ஆலயத்தில் வழிபாடு நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் திரு.ஜெ.சீனிவாசன், ஏர்போர்ட் பகுதி செயலாளர் திரு.ரமேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00