கொரோனா தடுப்பு நடவடிக்‍கையாக மூடப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளை வரும் 1-ம் தேதி முதல் திறக்‍கலாம் - அனுமதியளித்து மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

Nov 27 2020 1:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தடுப்பு நடவடிக்‍கையாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளை வரும் 1-ம் தேதி முதல் திறக்‍க அனுமதியளித்து மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்பு கலந்தாய்வு நிறைவுபெற்றுவிட்ட நிலையில், தமிழகம் உட்பட சில மாநிலங்களில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டிருக்கும் மருத்துவ கல்லூரிகளை மீண்டும் திறக்கவேண்டும் என்று தேசிய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று, மருத்துவ கல்லூரிகளை வரும் 1-ம் தேதி முதல் திறக்‍க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட மருத்துவ கல்லூரிகளை வரும் 1-ம் தேதியோ அல்லது அதற்கு முன்போ திறப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என அறிவிக்‍கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00