ஊட்டி அருகே தொழிற்சாலை அதிகாரி ஒருவரால் 100 பேருக்கு பரவியது கொரோனா தொற்று - ஊசி தொழிற்சாலை முழுமையாக மூடப்பட்டு சீல் வைப்பு

Jul 9 2020 4:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊட்டி அருகே இயங்கி வரும் தனியார் ஊசி தொழிற்சாலையில், அதிகாரி ஒருவரால், 100 பேருக்கு, கொரோனா தொற்று பரவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம், எல்லநள்ளி பகுதியில், தனியார் ஊசி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. சுமார் 800 பேர் பணிபுரியும் இந்த ஆலையில், அதிகாரி ஒருவருக்கு கடந்த 16-ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டு, கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 22 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதற்கு முன்புவரை, தொடர்ந்து தொழிற்சாலைக்‍கு வந்து தொழிலாளர்களுடன் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். இதனால், தொழிற்சாலையில் உள்ள 100 பணியாளர்களுக்‍கு கொரோனா பரவியுள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த தொழிற்சாலைக்‍கும் சீல் வைக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00