பொதுத்தேர்வை தவறவிட்ட +2 மாணவர்களுக்கு, வரும் 27-ம் தேதி தேர்வு நடத்தப்படும் - தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Jul 9 2020 4:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிளஸ் 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27-ம் தேதி தேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ள தகவலில், மார்ச் 24ந்தேதி தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் ஜூலை 27 ந்தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது. மாணவர்களுக்கு தங்களின் சொந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். மாணவர்கள் புதிய நுழைவுச்சீட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 13-ம்தேதி முதல் 17-ம்தேதி வரை பள்ளிகளிலும் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தங்களின் நுழைவுச்சீட்டுகளை குறிப்பிட்ட தேதிகளில் தனித்தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம். பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுத நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படமாட்டாது. தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்வதற்காக தேவைக்கேற்ப போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் தேர்வர்கள் தனி அறைகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00