ஊரடங்கு உத்தரவு விற்பனையின்றி தேங்கிக்கிடக்கும் வெள்ளரிப் பிஞ்சுகள் : மாடுகளுக்கு உணவாக போடும் அவலம்

Apr 9 2020 5:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பெரம்பலூரில், வயலில் விளைவிக்கப்பட்ட வெள்ளரிப் பிஞ்சுகளை விற்க முடியாமல் மாடுகளுக்கு உணவாக போடும் அவலம் ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வெள்ளரிப்பிஞ்சு சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். கோடைகாலத்திற்கு ஏற்ற இயற்கையான குளிர்ச்சியைத் தரக்கூடிய வெள்ளரிப் பிஞ்சுகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்குவதால் அவர்களுக்கு நாள்தோறும் போதிய வருமானம் கிடைக்கும். தற்போது கொரோனோ ஊரடங்கு உத்தரவால் வயலில் உற்பத்தி செய்யப்பட்ட வெள்ளரிப் பிஞ்சுகளை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். வெள்ளரி பிஞ்சுகள் வயலிலேயே முடக்கப்பட்டிருப்பதால், அறுவடை செய்ய முடியாமல் தவித்து வரும் விவசாயிகள், உள்ளூர் கிராம மக்களுக்கு தேவையானவற்றை வழங்கி வருகின்றனர். ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிரிடப்பட்ட வெள்ளரி பிஞ்சுகள், விற்பனை செய்யமுடியாததால், வாங்கிய கடனுக்கு வட்டி கூட கொடுக்க முடியாத நிலைக்‍கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00