உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைப் பறித்த தமிழக அரசுக்‍கு கண்டனம் தெரிவித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் போராட்டம் - திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

Feb 18 2020 3:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைப் பறித்த தமிழக அரசைக்‍ கண்டித்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை, ஊராட்சி மன்ற தலைவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி, ஊராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஊராட்சி தலைவர்களுக்கு காசோலையில் கையொப்பமிடும் அதிகாரம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது தமிழக அரசின் புதிய அரசாணையால் அந்த அதிகாரம் பறிக்கப்பட்டு கணினி முறையில் வங்கி பணப்பரிவர்த்தனை மூலம் மட்டுமே வழங்க அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனால் திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 கிராம ஊராட்சிகளில் பணம் இல்லாததால், குடிநீர், தெரு விளக்கு, சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் தாமதம் ஏற்படும் நிலை உள்ளது. இந்நிலையில், ஊராட்சிகளுக்கு போதுமான நிதி ஒதுக்கவேண்டும் - நிதிகளை கையாளும் அதிகாரத்தை ஊராட்சிமன்ற தலைவர்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரிடம், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கோரிக்‍கை மனுவை அளித்தனர். கோரிக்கையை பரீசீலிப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00