கரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை

Feb 2 2020 4:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
கரூரில், மிகத் தொன்மையான 36 தமிழ் நூல்களை, முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி, 4 ஆயிரத்து 500 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அழிந்து வரும் தமிழ்மொழியை மீட்கவும், மொழிகளில் மிகத்தொன்மையான மொழி தமிழ் மொழி என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையிலும், புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கரூர் - சேலம் புறவழிச் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தொன்மையான தமிழி எழுத்தில் சங்க இலக்கியங்களை மீட்டு ஆவணப்படுத்தும் இந்த உலக சாதனை பதிவு நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். கரூர் பரணிபார்க் சாரணர் இயக்கம், திருவள்ளுவர் மாணவர் இளைஞர் இயக்கம் மற்றும் வளர்ச்சி அறக்கட்டளை இணைந்து தொல்காப்பியர் திறந்த வெளி அரங்கில் இந்த நிகழ்ச்சியை நடத்தின. தமிழின் பெருமையை உலக அரங்கில் பறைசாற்றும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சாரணர் உடையில் 4,500 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இதில் பங்கேற்று சாதனை படைத்தனர். சங்க இலக்கிய அறிஞரும், மதுரை காமராசர் பல்கலைக் கழக தமிழியல் தலைவருமான பேராசிரியர் முனைவர். இராமராஜபாண்டியன், கல்வெட்டு ஆய்வாளர் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் கருப்பண்ணன், மற்றும் உலக சாதனை புத்தக நடுவர் டிராகன் ஜெட்லீ ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

பதிற்றுப்பத்து, நற்றிணை, பதினெண் கீழ்க்கணக்கு உள்ளிட்ட 36 நூல்களை முழுமையாக தமிழ் எழுத்தில், 20 நிமிடத்தில் எழுதி முடித்து 4 ஆயிரத்து 500 மாணவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த பள்ளிக்கு தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00